அனுராதபுரம் – மஹவிலச்சிய – எலபத்கம பிரசேதத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளை காணவில்லை என்று, நேற்று மாலை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய குறித்த சகோதரிகள் வசிக்கும் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இதுவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
குறித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.