ஈரானில் யோகாவில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

ஈரானில் யோகாபயிற்சியில் ஈடுபட்டிருந்த 30 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

ஆண்களும் பெண்களும் இணைந்து யோகா பயிற்சியி;ல் ஈடுபட்டிருநதவேளை அவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட வகுப்புகளை நடத்திய யோகா பயிற்றுவிப்பாளர் அதற்கான அனுமதியை பெறவில்லை இன்ஸ்டகிராம் மூலம் விளம்பரம் செய்து பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்திருக்கவில்லை  தவறான விதத்தில் நடந்துகொண்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளில் பங்கெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோகா பயிற்றுவிப்பதும் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதுடன் கடும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

யோகா என்ற சொல் கூட பிழையான விடயம் என சரியா சட்டத்தின் அடிப்படையில் ஈரானிய அதிகாரிகள் சிந்திக்கின்றனர் என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

யோகாவை ஆபத்தானதாக கருத்தும்  தரப்பொன்றை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் யுத்த கப்பலொன்று அவசியமில்லை என மற்றொருவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து யோகா வகுப்புகளை நடத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்