பெரும்பாலும் விளையாட்டை மையமாக கொண்டு வித்தியாசமான படங்களை உருவாக்குபவர் இயக்குனர் சுசீந்திரன்.இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப்.
இப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சூரி, முனீஸ்வரன், காயத்ரீ சௌந்தர்யா உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படம் வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்ற தகவலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று கென்னடி கிளப் திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் கபடியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.