அப்பல்லோவில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட அரசியல் புள்ளி!

புதுவையின் வருவாய்த் துறை அமைச்சரான ஷாஜகான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஷாஜகான் தனது வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ஷாஜகானின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். மருத்துவ குழுவினர் இன்று காலை வரை ஷாஜகானின் உடல்நிலையை கண்காணித்து வந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நன்றாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதனை கொண்டு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ உபகரணங்களின் கூறிய கூடிய சிறப்பு ஆம்புலன்சில் அமைச்சர் ஷாஜகான் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருடன் ஷாஜகானின் மனைவி மற்றும் உறவினர்கள் உடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும், இதற்கிடையே அவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு வதந்தி ஒன்று பரவியது. இதனால் மருத்துவமனைக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். இதனால் மருத்துவமனையை பரபரப்புக்குள்ளாகியது. அதன்பிறகு அங்கிருந்து அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் கலைந்து சென்றுள்ளனர்.