குரங்கிற்கு நேர்ந்த பரிதாபம்!!

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளது அப்பகுதியில் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

வெகுநாட்களாகவே தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதி அருகே குரங்கு ஒன்று சுற்றித் திரிந்து வந்துள்ளது. இந்த குரங்கு அங்குள்ள மின் கம்பம் ஒன்றில் தாவும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

இதன்காரணமாக அங்கியுள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதனை கண்ட அருகில் உள்ள கடைக்காரர்கள், மற்றும் பொதுமக்கள் இறந்த குரங்குக்கு மஞ்சள் தடவியும் , பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், அதை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஏற்பாடுகளை செய்தனர்

வெகு நாட்களாக அங்கே சுற்றித் திரிந்த குரங்கு மின்சாரம் தாக்கி இறந்தது அப் பகுதி மக்களை பரிதாபப்பட வைத்துள்ளது.