திமுக முக்கிய நிர்வாகி சாலை விபத்தில் மரணம்.!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் (வயது 50). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும், பள்ளப்பட்டி திமுக முன்னாள் சேர்மன்.

இவர் நேற்று அவரது காரில் சேலத்தில் இருந்து கரூர் சென்றுள்ளார். அப்போது கார் முதலைப்பட்டி பைபாஸ், நல்லிபாளையம் அருகே சென்ற போது காரின் முன்பு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கை எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மோதிய லாரி நிற்காமல் சென்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து நல்லிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பலியான சையத் இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விபத்துக்கு காரணமாக லாரியை கீரம்பூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.