மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளை வெற்றி பெற்றது, மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த சின்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், ஐஜேகே. தலைவர் பாரிவேந்தர், ஆகிய 4 பேர் உள்பட மொத்தம் 23 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், காங்கிரசுக்கு அடுத்து அதிக தொகுதிகளை கைப்பற்றிய திமுக, மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத்துவம் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எ.ம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். மேலும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.
இது வரை, டெல்லி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி செயல்பட்டு வந்தார் இன்று நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி தேர்ந்து எடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் எதிரிபார்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் உள்ள டி.ஆர்.பாலு, தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டி.ஆர்.பாலு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழுவின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டால், கனிமொழிக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆ.ராசாவும் இந்த போட்டியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.