பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்த நபர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பெண் டிடிஆர்.!

ஜெர்மனி நாட்டில் உள்ள இரயில்வே துறையில் பணியாற்றி வரும் இளம்பெண்ணின் பெயர் தெரசா. இவர் இரயில்வே பயணசீட்டு பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

இவர் இரவு வேளைகளில் பணியில் ஈடுபடும் சமயத்தில்., ஆட்கள் இல்லாத நேரம் என்பதால்., பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்யும் நபர்களை மிரட்டி., ஆபாச புகைப்படம் மற்றும் விடீயோக்களை பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில்., இது தொடர்பான வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென இணையத்தில் வெளியானதை தொடர்ந்து., அந்த பகுதியில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இரவு வேளைகளில் பயணசீட்டு இல்லாமல் இரயிலில் பயணம் செய்யும் நபர்களை., மிரட்டி ஆபாச படம் எடுத்து பதிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.