தாமதாகும் டயானாவின் சிலை: அரண்மனை நிர்வாகம் விளக்கம்

இளவரசி டயனா இறந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி, அரண்மனையில் சிலை ஒன்று நிறுவப்படும் என இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்பாக கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது இரண்டு வருடங்களை தாண்டியும் இன்னும் சிலை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு, பாரிசில் கார் விபத்தில் சிக்கி பலியாகினார். அவரது நினைவை கொண்டாடும் விதமாக, கென்சிங்டன் பூங்காவில் பொதுமக்கள் காட்சிக்கு சிலை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிலை செய்யும் பொறுப்பானது, பிரபல சிலை செதுக்கலர், இயன் ரேங்க் பிராட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் 1998ம் ஆண்டு பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் நாடுகளில் உள்ள நாணயங்களில் ராணியின் புகைப்படத்தை வடிவமைத்தவர்.

2012ல் ராணியின் வைர விழாவை குறிக்கும் விதமாகவும் ஒரு நாணயத்தை அவர் வடிவமைத்திருந்தார்.

இந்த நிலையில் சிலை தாமதம் குறித்து பேசியுள்ள அரண்மனை செய்தி தொடர்பாளர், சிலை நிறுவுவது ஒரு குறுகிய கால திட்டமல்ல. அது எப்போதும் இருக்கக்கூடிய ஒரு சிலை. நீடித்த நினைவுச்சின்னமாக இருக்கும். சரியான நேரத்தில் நிறுவப்படும் என கூறியுள்ளார்.