தெரசா மே தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர், நேற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி தன்னுடைய கணவருடன் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்து வந்த தெரசா மே வெள்ளிக்கிழமை காலை, பவர்புல் 1922 குழுவின் தலைவரான கிரஹாம் பிராடிவுடனான சந்திப்பிற்கு பின்னர், பதவி விலகுவதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கண்கலங்க 6 நிமிடம் உரையாற்றிய தெரசா வரும் 7ம் திகதியுடன் தன்னுடைய பதிவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார்.
அவருடைய இந்த அறிவிப்பானது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த உணர்ச்சி மிகுந்த உரைக்கு பின்னர் தெரசா மே தன்னுடைய கணவர் பிலிப் உடன் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
அதன்பிறகு தெரசா, Twyford பகுதியிலுள்ள தன்னுடைய வாராந்திர மாளிகைக்கடைக்கு கணவரை அழைத்து சென்றுள்ளார். அவருடன் இருண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் இருந்துள்ளனர்.