காதலியை கடத்தி நண்பர்களுக்கு கொடூரமாக விருந்தளித்த காதலன்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சார்ந்த 17 வயதுடைய பெண்., சேலம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல பணிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர்., பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., ஜவுளிக்கடையில் மேற்கொண்ட விசாரணையிலும் முடிவு கிடைக்காததால் வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். இந்த நிலையில்., சுமார் மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஜவுளி கடைக்கு பணிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., சம்பவத்தன்று பணிக்கு வந்த சமயத்தில் மூன்று பேர் அவரை துரத்தி., எனது உறவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறியதை அடுத்து., அவர்களுடன் சென்ற சமயத்தில் மயக்க மருந்து மூலமாக மயக்கமடைய செய்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

சம்பவத்தன்று பெண்ணின் காதலன் அவரை தனிமையில் அழைத்து சென்ற நிலையில்., பெண்ணின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூன்று நாள் தொடர்ந்து போதை பொருட்களை சிறுமியை உபயோகம் செய்ய வைத்து., அவரை சீரழித்து வந்த நிலையில்., இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் விசாரணையில் பெண் மாற்றி கூறியதும்., பெண்ணின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அனைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.