அமெரிக்காவில் மகள் மற்றும் கணவரின் கண்முன்னே பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த Shonduras என்பவர் தன்னுடைய மனைவி ஜென்னி மெக் பிரைட் மற்றும் மகள் அட்லெயுடன், மாயில் உள்ள ஹானா பாதையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென ஜென்னியின் கால் தடுமாறி குன்றிலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், கூச்சலிட்டபடியே வேகமாக ஜென்னியை நோக்கி ஓடினர்.
இதில் ஜென்னியின் கை மற்றும் கால் பகுதியில் கீறல்கள் ஏற்பட்டிருந்தது.
தங்களுடைய காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை தம்பதியினரை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
இதனை பார்த்த இணையதளவாசிகள், அதிக லைக் பெற வேண்டும் என்பதற்காகவே தம்பதியினர் பதிவேற்றம் செய்திருப்பதாக நினைத்துக்கொண்டு முதலில் கடுமையாக சாடியுள்ளனர். அதன்பிறகே நிலையை புரிந்துகொண்டு ஆறுதல் கூறியிருக்கின்றனர்.