அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்!

கனடா குடியேறிகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற இந்தியரை எல்லா பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு ஹெலிகாப்டர் உதவியுடன், இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜவாந்த் சிங்கை பார்டர் ரோந்து ஏஜெண்ட் ஒருவர் கைது செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜவாந்த், இரண்டு குடியேறிகளிடம் 2200 டொலர் வாங்கிக்கொண்டு சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.

வாகனத்தில் வந்த சிலர் ஸ்ட்ரௌரென்ஸ் ஆற்றின் குறுக்கே அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது, எல்லை பாதுகாப்பு ஹெலிகாப்டர் அவர்களை கண்டறிந்தது.

இதனையடுத்து எல்லை பாதுகாப்பு அதிகாரி அவர்களை தடுத்து நிறுத்தி, ஜவாந்த் சிங்கை கைது செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.