நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் நாம் தமிழர் கட்சியின், கூட்டணி திட்டம் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 16.45 லட்சம் வாக்குகள், அதாவது 3.88% சதவீதம் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 1.08 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்தது.
இந்நிலையில், தனியார் தொலைகாட்சி நேர்காணலில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.88 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
கிடைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்தைக் காட்டி எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி பேச மாட்டேன். கடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் என தெரிவித்துள்ளார்.