யாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்!

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பாடுகள்  அதிகரித்துள்ளன.

அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்கு தெரியவருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.