குருணாகலில் நடந்த திருமணம் வைபவம் ஒன்றில் முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவர் சமைத்த உணவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது சமையல் கலைஞராக முஸ்லிம் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் உணவை புறக்கணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திருமண நிகழ்வில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்காக மதிய உணவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் பலர் வீட்டிற்கு வந்த பின்னர் குறித்த திருமண உணவை முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவரே சமைத்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு முன்னர், அந்த பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இன பாகுபாடு இன்றி குறித்த சமையல் கலைஞரே சமையல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக குறித்த கலைஞரின் உணவுகளை புறக்கணித்துள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் தம்பதியரை வாழ்த்தி விட்டு உணவு பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளதாக குறித்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.