விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவரா இவர்.!

தமிழ் சினிமாவில், ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். மேலும் எப்பொழுதும் நாட்டுப்பற்று மிக்க படங்களில், மக்களுக்கு உதவும் வகையிலேயே பல படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி தலைவராக பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட நடிகர் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு,வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை அமைச்சராக உறுப்பினராகவும் இருந்தார். அதனை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த வந்த நிலையில் தற்போது ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் அவரது கட்சி தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில் விஜயகாந்துக்கு ஜோடியாக, அரசாங்கம் என்ற படத்தில் நடித்தவர் நடிகை நவ்நீத் கவுர். இவர் மகாராஷ்டிரா மாநிலம்,அமராவதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் அவரது கணவரும் அதே தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் நவ்தீப் கவுருக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த ரோஜாவும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.