கடந்த ஒரு வருடமாகவே 10 ரூபாய் நாணயங் களை விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோவைஉள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் வியாபாரிகளும், பஸ்கண்டக்டர்களும், பெட்ரோல்பங்குகளிலும் வாங்க மறுத்துவந்தனர்.
இதனால் சிரமப் பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் வங்கிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் வங்கிசார்பில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள அறிவிப்பு கொடுத்தும் பல பகுதிகளில் வாங்கப்படவில்லை.
இந்நிலையில் நெல்லைமாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 1௦ரூபாய் நாணயங்களை வாங்கி வந்த நிலையில் சுரண்டையில் உள்ள சிலபெட்ரோல் பங்க்குகளில் 10 ரூபாய நாணயங்களை வாங்க மறுப்பதுடன். அதற்கான அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர்.
ஒரு சிலர்மட்டுமே 10 ரூபாய் நாணயங்களை வேறு வழியின்றி வாங்கி வரும் நிலையில் பெட்ரோல் பங்க்குகளே அதிலும் கம் பெனியால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளே வாங்க மறுப்பது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை யின் போது பழைய 500,1000 தாள்களை மாற்ற அரசுபெட்ரோல் பங்க்குகளை பிரதிநிதியாக வைத்திருந்த நிலையில் பெட்ரோல் பங்க்குகள் தற்போது 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது கவலைக்குரியது.
இதுகுறித்து பெட்ரோல்பங்க் தரப்பில் விசாரித்தபோது விற்பனை ஆகும் பணத்தை தினமும் வங்கியில் செலுத்துவோம். ஆனால் வங்கிகளில் 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் வாங்க முடியவில்லை என்றனர்.
பொதுமக்கள் தரப்பில் 10 ரூபாய் நாணய விசயத்தில்அரசும் வங்கியும் தெளிவானவரைமுறையை பிறப்பிக்க வேண்டும் என்றனர். ஆகவே அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.