தற்செயலாக மனைவியின் பேஸ்புக்கை பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பத்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்செயலாக ஒருநாள் மனைவி பேஸ்புக்கை திறந்தே விட்டுச் செல்ல, கணவன் கண்களில் பட்ட விடயங்கள் அவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தன.

19 வயதே இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜோடி, Seth மற்றும் Crissy.

மகிழ்ச்சியான வாழ்க்கை, நான்கு குழந்தைகள் என்று சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீரென சில விரும்பத்தகாத செயல்கள்.

Crissy சில நாட்கள் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்க ஆரம்பித்தார். ஒரு நாள் தனது பேஸ்புக் அக்கவுண்டை லாக் அவுட் செய்யாமல் Crissy விட்டுச் செல்ல, அது Seth கண்களில் பட்டது.

அதிலிருந்து எத்தனை பேருடன் Crissy ஒரு இரவு படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்பது முதல் Crissyக்கு இன்னொரு நீண்ட கால காதலன் இருப்பது வரை Sethக்கு தெரியவந்தது.

தனது உடலை மட்டுமின்றி, தனது மனதையும் அவள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் என்னால் தாங்க இயலவில்லை என்று கூறும் Seth, இரவில் குழந்தையை பாலூட்டச் செய்வது முதல், டயாப்பர் மாற்றுவது வரை, தானே செய்ததை நினைவுகூறுகிறார்.

Crissy மேல் படிப்பு படிக்க விரும்பியபோது கூலி வேலை வரை செய்து அவருக்கு உதவியதையும் எண்ணும்போது, அவர் செய்த துரோகத்தை Sethஆல் தாங்க இயலவில்லை. இவ்வளவும் நடந்தும், வீட்டை விட்டு செல்ல வேண்டாம், ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்வோம் என்று கூறியும் Crissy விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டார்.

நான்கு ஆண்டுகளாக பிள்ளைகளை வளர்த்து வரும் Seth, இப்போதும், அவள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாகத்தான் இருந்தாள், ஒரு நாள் வரும், அவள் திருந்தி வருவாள், அப்போது தன் பிள்ளைகள் மீது அவள் நல்ல கவனம் செலுத்துவாள் என்கிறார் அவர்.