பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் நகரில் கடை புகுந்து கொள்ளையிட்ட கும்பல் ஒன்று விசித்திர காரணத்தால் தண்டனை இன்றி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.
பெட்ஃபோர்ட் நகரில் குடியிருக்கும் ருமேனிய கும்பல் ஒன்று மே ஒன்றாம் திகதி கடை புகுந்து சுமார் 2,000 பவுண்டுகள் மதிப்பிலான நறுமணத் தைலம் போத்தல்களை கொள்ளையிட்டு மாயமாகியுள்ளனர்.
தகவல் அறிந்து துரத்திய பொலிசார், சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த ருமேனிய கும்பலை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 17 விலை உயர்ந்த நறுமணத் தைலம் போத்தல்களையும் கைப்பற்றினர்.
இந்த வழக்கு வர்செஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் 2 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கும்பலுக்கு 4 மாத காலம் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை குடியிருப்பில் இருந்து வெளியேற தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் தலா 300 பவுண்டுகள் அபராதம் செலுத்தவும் உத்தரவானது. ஆனால் இந்த தீர்ப்புக்கு பின்னர் கொள்ளை கும்பல் அளித்த விளக்கம் நீதிபதியை சிந்திக்க வைத்துள்ளது.
ருமேனியர்களின் வழக்கப்படி உறவினர் எவரேனும் இறந்தால், அவரது நினைவாக ஆடம்பர விருந்து ஏற்பாடு செய்யப்படும், இதற்கு அதிக செலவாகும் என்பதாலும், அந்த உறவினருக்கு பொருளாதார உதவி செய்வதற்காகவே இந்த கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதி செய்த நீதிபதி அந்த கும்பலை சிறையில் தள்ளாமல் வீட்டுக்காவலில் இருக்கும்படி தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.