வயிற்று வலியால் துடித்த சிறுமி: மருத்துவமனையில் தெரியவந்த உண்மை!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருக்கும்போது அவரது மகளுக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தூரி பகுதியில் குடியிருக்கும் அந்த தாயாரின் 4 வயது மகளுக்கே பாடசாலையில் வைத்து இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அந்த தாயார் தமது மகள் படிக்கும் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ள தமது மகளுடன் சென்றுள்ளார்.

பின்னர் கூட்டம் முடிந்து, மகளுடன் குடியிருப்புக்கும் திரும்பியுள்ளார். இந்த நிலையில் தமக்கு வயிற்றில் வலி இருப்பதாக அந்த தாயாரிடம் சிறுமி முறையிட்டுள்ளார்.

சாப்பிட்ட உணவு காரணமாக இருக்கலாம் என கருதி, அந்த தாயார் மகளை ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

ஆனால் அடுத்த நாள் காலையிலும் வலி இருப்பதாக சிறுமி கூறவே பதறிய அவர், சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளார்.

மருத்துவமனையில் நடந்த சோதனையில் தான் உண்மை என்னவென தெரியவந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியிடம் விசாரிக்கையில், பாடசாலையில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருந்தபோது சிறுமி அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பாடசாலையில் வேலை செய்யும் நபர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த விவரங்கள் தெரியவரவும் சிறுமியின் உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பாடசாலை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.