இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: காதலன் மீது இறுகும் சந்தேகம்…

சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் குளியலறையில் பிரித்தானிய இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரது காதலனை மேலும் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி பிரித்தானிய இளம்பெண் அன்னா ரீட் என்பவர் ஹொட்டல் ஒன்றின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது கதலன் ஜேர்மானியரான 29 வயது மார்க் ஷாஸில் கைது செய்யப்பட்டார்.

அன்னா ரீடை இவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார்.

ஆனால் ஷாஸில் தமது நிலையை விளக்கி, இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என சாதித்து வருகிறார்.

சம்பவத்தன்று இருவரும் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு ஹொட்டலுக்கு திரும்பிய நிலையில், மேற்கொண்ட காதல் விளையாட்டு எல்லை மீறி சென்றதாகவும்,

இதுவே 22 வயதான அன்னாவின் மரணத்திற்கு காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஷாஸிலின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள், திங்களன்று மேலும் 3 மாத கால விசாரணை அவகாசம் கேட்டுள்ளனர்.

மேலும், அன்னா மரணமடைந்தது காதல் விளையாட்டு காரணமாக அல்ல எனவும், மருத்துவ அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவே மரண காரணம் எனவும் அதிகாரிகள் தரப்பு வாதிட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட காதல் விளையாட்டானது, தாங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த 3 மாத காலமும் மேற்கொண்டதாகவும்,

அது தங்களின் வாழ்க்கையின் தினசரி நடவடிக்கையில் ஒன்று எனவும் ஷாஸில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காதல் விளையாட்டு பயிற்சிகளை தாம் தாய்லாந்தில் இருந்து கற்றுக் கொண்டதாகவும்,

இதுகுறித்து தெரியவந்த அன்னா, மிகுந்த ஈடுபாடு காட்டியதாகவும், இதனால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் இருவரும் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.