தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகரியுடன், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் யோகி பாபு. வெறும் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகரான யோகிபாபு தனது இயல்பான நடிப்பால் தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறார். இதனால் அவரது மார்க்கெட் உயர்ந்து விட்டதாக அனைவரும் பேசிவருகின்றனர்.
தற்போது காமெடி நடிகர்களில் கலக்கி வரும் யோகி பாபுவிற்கு தற்போது அதிகப்படியான படங்கள் கை வசம் உள்ளன. இவர் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்தநிலையில் யோகி பாபு தற்போது லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அனுசரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவருடன் பல காமெடி பிரபலங்கள் நடித்துள்ளனர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்று, படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்தின் பெயரை கண்டதும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த படத்திற்கு ‘பன்னிக்குட்டி’ என பெயர்வைத்துள்ளனர்.
இன்று வெளியான அந்த போஸ்டரில் ஒரு உண்மையான பணிக்குட்டியும் உள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது