கிரிமினல் வழக்கு உள்ள திமுக எம்பிக்கள் எத்தனை பேர்?

நடந்து முடிந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 539 வெற்றி மக்களவை உறுப்பினர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த 539 மக்களவை உறுப்பினர்களில் 233 பேர்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனர். இது கடந்த 2014 ஆம் ஆண்டை விட தற்போது 26% அதிகரித்து, 43% கிரிமினல் வழக்கு உள்ள எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கட்சிகள் வாரியாக கிரிமினல் வழக்கு கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கை பின் வருமாறு,

BJP : 116 MP – 36%
TMC : 9 MP – 41%
DMK : 10 MP – 43%
CON : 29MP – 57%
JDU : 13MP – 81%

அதிகபட்சமாக பாஜக MP 116 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒருவர் மீது பயங்கரவாத வழக்கும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் 29 எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவின் 10 எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதன் சதவீதம் 43 என்று இருந்தாலும், அது 23 எம்பிக்கள் என 4 கூட்டணி கட்சி எம்பிக்களையும் சேர்த்து கணக்கிடபட்டுள்ளது. திமுக எம்பிக்கள் மட்டும் 19 பேரில் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் சதவீதம் 47 ஆகும். தேர்தல் ரத்தான வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீதும் கிரிமினல்கள் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.