தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தஆண்டை விட 25 சதவீத விபத்தைகுறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தெரிவித்தார்.
அவரின் அறிவுறுத்தலின் பேரில், விபத்தை குறைப்பதற்காக வரும் ஜூன் 1ம் தேதிமுதல் ஹெல்மெட் அணியாமல் பெட் ரோல் பங்க்கிற்கு வந்தால் பெட்ரோல் போடுவதில்லை என்ற புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ள உள்ளனர்.
திருச் செந்தூர், குலசேகரன்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் இந்தபுதிய முன்மாதிரி முயற்சி மேற்கொள் ளப்படுகிறது.
ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல்பங்க்கில் நடந்தது.
இதில் பேசிய எஸ்.பி. முரளிரம்பா, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சப் டிவிஷனிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரோடு இணைந்து விபத்தை குறைக்கும் முயற்சியாக வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் போடுவதில்லை என்ற புதிய முயற்சியை துவங்கவுள்ளனர்.
திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி.பாரத் ஏற்பாட்டில் இந்த புதிய முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நோட்டீஸ் ஒரு வார காலம் கிராம மக்களுக்குவழங்கப்படும்.
கடந்த சில நாட்களுக்குமுன்பு திருச்செந்தூர் – திருநெல்வேலி ரோட்டில் பைக்கில் சென்ற இருவர் விபத்து ஏற்பட்டபோது ஹெல்மெட் இல்லாததால் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு 20 சதவீதம் விபத்துக்கள்குறைக்கப்பட்டன. 2018-19ம் ஆண்டில்இன்னும் 25 சதவீத விபத்துக்களை குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
இந்த புதிய முயற்சி பலன் அளித்தால் தூத்துக்குடி டவுன், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.