மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!!

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்தநிலையில் பிரதமர் பதவியேற்பு விழா வரும் 30 ஆம் தேதி, ராஷ்ட்ரபதி பவனில் நடக்கவுள்ளது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக சார்பில் ஆ.ராசா மற்றும் டிஆர் பாலு ஆகியோர் விழாவில் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.