இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் இறந்துவிட்டாரா? – அஸ்வின்

உலக கோப்பையை தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சியை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

அந்த செய்தி என்னவென்றால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சனத் ஜெயசூர்யா கனடாவில் நடந்த கார் விபத்தில் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தச் செய்தி உண்மையா? சனத் ஜெயசூர்யா இறந்துவிட்டதாக எனக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது. ஆனால் ட்விட்டரில் இது போன்ற செய்திகள் வரவில்லை என்று பதிவு செய்துள்ளார். பின்னர் அஸ்வினுக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் ஜெயசூர்யா இறந்துவிட்டதாக வந்த செய்தி உண்மையில்லை. அது ஒரு வதந்தி என பதிலளித்துள்ளார்.

இந்த வதந்தி குறித்து ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார். எனது உடல் ஆரோக்கியம் குறித்து சில பொய்யான செய்திகள் பரவி வருகின்றது. கார் விபத்தில் நான் இறந்து விட்டதாக கூறப்படும் செய்தியை புறக்கணியுங்கள். நான் கனடாவுக்கு செல்ல வில்லை, இலங்கையில் தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.