இமயமலையில் தொடர் உயிரிழப்புகள்.! விளக்கத்துடன் நேபாள அரசு.!!

இந்த உலகின் மிகவும் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் வருடம்தோறும் பல வீரர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்., மலையேற்ற வீரர்களின் தொடர் உயிரிழப்புகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பும் வீரர்கள்., நேபாள நாட்டின் அரசிடம் உரிய அனுமதி பெற்று., செற்பாக்களின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட வேண்டும்.

இதன் மூலமாக மலையேறும் வீரர்கள் விதிகளுக்கு உட்பட்டு மலையேறி வந்த நிலையில்., கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு உயிரிழப்புகளானது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதுமட்டுமல்லாது தற்போதைய மாதங்களில் சுமார் 16 பேர் வரை அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை மலையேறும் வீரர்கள் அவர்களின் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

அவர்களின் தரப்பு வாதத்தில்., எவரெஸ்டில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு நெரிசலும் ஒரு காரணமாக உள்ளது. நேபாள நாட்டின் அரசானது அளவுக்கு அதிகமான வீரர்களை தொடர்ந்து மலையேற அனுமதிக்கிறது. இதனால் ஏற்படும் நெரிசலில் காரணமாகி பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதனை கவனித்த நேபாள அரசு., அதிகமான அனுமதி வழங்கப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற கூற்றை ஏற்க மறுத்துள்ளது. இதுமட்டுமல்லாது எவரெஸ்ட் சிகரத்தை தற்போது வரை சுமார் 381 பேர் சென்றடைந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் பாதைகளில் அளவுக்கு அதிகமான மலையேறும் வீரர்கள் போன்ற காரணத்தால் வீரர்கள் பலர் குறித்த இடங்களில் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் ஏற்படும் உடல் நலக்குறைவின் காரணமாகவும் சில உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போது வரை உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களின் ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். இதுவரை காணாமல் போனவர்கள் மீண்டு வர நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இங்கு பயணம் மேற்கொள்வது சகஜமான மற்றும் சிக்கலான விஷயம். இந்த பயணத்திற்கு தேவையான விழிப்புணர்வு இல்லையேல்., விபத்துகள் தவிர முடியாதவை என்று பதில் தெரிவித்துள்ளது.