இந்தியாவில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் அட்டூழியமானது அதிகரித்து கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஒரு புறம் இருக்க., நக்சலைட்டுகள் அட்டூழியமும் மறுபுறம் அதிகரித்து கொண்டு வருகிறது.
இதனை காவல் துறையினர் மற்றும் இராணுவ படையினர் சேர்ந்து தடுப்பதற்கு பலவிதமான கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும்., சில சமயங்களில் இந்த செயலை தடுக்க முடியாமல் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாரைகோளவில் இருக்கும் குசாய் பகுதிக்கு அருகில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் அம்மாநில காவல் துறையினர் சேர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நேரத்தில்., யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இவர்கள் வந்த வாகனங்களின் மீது கையெறிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையினர் 11 பேர் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடி துடித்த இவர்களை மீட்ட சக வீரர்கள்., அங்குள்ள மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் காவல் துறையனரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.