ஜல்லிக்கட்டு காளையால் ஒரு மாவட்டமே சோகத்தில் மூழ்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நேற்று செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை தஞ்சை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை கட்டிதழுவி அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துவங்கிவைத்தார். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் போட்டியை காண குவிந்திருந்தனர். போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வந்த சின்ன கொம்பன் என்று அழைக்கப்படும் காளை சிறப்பாகி விளையாடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றிபெற்றது.

நேற்றுநடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர் சிறு வயதிலிருந்தே ஜல்லிக்கட்டு மீது அதிக ஆர்வம் உடையவர். இவர் பாண்டி என்ற காளையை வளர்த்துவந்தார். இந்த காளைக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பாண்டி வீரநடை போடு கிளம்பியுள்ளான். ஆனால் அந்த காளைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து காளையை அன்பு அவர்களின் எடுத்துச்சென்று மரியாதையை செலுத்தி அடக்கம் செய்தனர். இந்த சோக சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.