மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசாத் கிராமத்தை சார்ந்தவர் வினோத் மகராஜ். இவர் திருமணம் செய்து வைக்கும் புரோகிதராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7 ம் தேதியன்று அங்குள்ள பக்ரோடு கிராமத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில்., கடந்த 23 ஆம் தேதி அதே பகுதியில் நடைபெறும் மற்றொரு திருமணத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில் கடந்த 23 ஆம் தேதியன்று திருமணத்திற்கு அவர் வராததை அடுத்து., அவரை திருமண வீட்டார்கள் தேடி வந்துள்ளனர். அவரை தேடியும் காணாது அக்கம் பக்கத்தில் விசாரணை செய்ததில்., அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்துவிட்டார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இவர் கரம்பிடித்த பெண்ணிற்கு கடந்த 7 ம் தேதியன்று அவரே திருமணம் செய்து வைத்ததும்., திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் இவர்கள் இருவரும் ஓட்டம் பிடித்ததும்., ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களையும் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நபர்கள்., அவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., அவர் திருமணம் முடித்து வைத்த பெண்ணிற்கும் – புரோகிதற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., திருமணம் முடிந்தும் இவர்களுக்குள் உறவு மலர்ந்து வந்துள்ளது.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் சேர்ந்து – புரோகிதரின் முதல் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என அனைவரும் ஊரை விட்டு சென்றுவிட்டனர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது புரோகிரதரை விசாரிக்க வந்த நபர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.