இந்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் பல விதமான துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அபரீதமான தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டு வருகிறோம். என்னதான் இன்றுள்ள சூழ்நிலையில் பல விதமான பொருட்களின் தயாரிப்பில் பல சாதனைகளை புரிந்து வந்தாலும்., சில கண்டுபிடிப்புகள் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மெதுவாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.
அவ்வாறு நமது மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த பொருட்கள் பல இருந்தாலும்., நமது சுற்றுப்புற சூழ்நிலையிலும்., நமது வாழ்வியலிலும்., நம்மிடமும் பல பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளில் முக்கிய பொருளாக பிளாஸ்டிக் உள்ளது. இந்த பிளாஸ்டிக்கில் ஒரு முறை உபயோகம் செய்யும் நெகிழி., பல முறை உபயோகம் செய்யும் நெகிழி என்று பல விதமான படைப்புகள் உள்ளது. அவ்வாறு இந்த நெகிழியை உபயோகம் செய்யும் நாம்., அதனை மறுசுழற்சி செய்யாமல் தீயிட்டு கொளுத்தியும்., கடல்களில் கொட்டியும் வருகிறோம்.
இது ஒருபுறமிருக்க இயற்கை வளங்களை தொடர்ந்து அழித்து கொண்டு வருவதாலும்., நமது செயல்பாடுகளாலும்., தொடர்ந்து மாறி வரும் காலநிலையில் காரணமாகவும் தொடர்ந்து பல்வேறு விதமான பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். இந்த காலநிலை மாறுபட்டால் நாம் பெரிதளவும் பாதிக்கப்பட்டு இருப்பது., தண்ணீர் பற்றாக்குறை என்ற பிரச்சனையால் தான். இன்றுள்ள நிலையில்., பெரும்பாலான ஊர்கள் மற்றும் நாடுகளில் இருக்கும் முதன்மை பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது.
இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு நாம் என்ன விதமான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தாலும்., இயற்கையாக பெய்ய வேண்டிய மழையின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளது., காடுகளை அளித்ததன் காரணமாக வானிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் கடுமையான பாதிப்புகளை நாம் அடைந்து வருகிறோம். அந்த வகையில்., காடுகளில் இருக்கும் விலங்குகள் தண்ணீரை தேடி கூட்டம் கூட்டமாக ஊர்களுக்கு வருவதும்., நீர் நிலைகளை தேடி அலைவதையும் நாம் தினமும் பல்வேறு செய்திகளில் கண்டு வருகிறோம்.
காடுகளில் இருக்கும் விலங்குகள் கூட சரிவர உணவுகள் கிடைக்காமல் உயிருக்கு போராடி., இன்னுயிரை நீத்து வரும் நிலையில்., சிறிய அளவிலான பறவைகளும் இந்த தாக்கத்தின் காரணமாக பெரும் அவதியடைந்து வருகிறது. மனிதனின் சுய தேவைக்காக இயற்கையின் கொடையை தொடர்ந்து அளித்துக்கொண்டே வருவதால் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பல பாதிப்புகளை பற்றி மனிதன் இன்னும் சிந்திக்காமல் உள்ளது பெரும் பின்னடைவையே நமக்கு ஏற்படுத்துகிறது.
பறவைகள் தொடர்ந்து பல விதமான முறையில் உயிரிழந்து வருகிறது என்பதை நாம் அறிந்துள்ளோம். கோடைகாலத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிப்போவதன் காரணமாக பறவைகளுக்கு முடிந்தளவு தண்ணீர் வையுங்கள் என்று தொடர்ந்து விழிப்புணர்வுகளை நாம் செய்து வந்த நிலையில்., தற்போது வெளியான காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கு உணவில்லாத பட்சத்தில் உணவுகளுக்காக போர் புரியும் சூழல் ஏற்படின் போர் புரிந்தாவது., அதனை பெற்று தனது நாட்டை பாதுகாப்பான்.
விலங்குகளுக்கு உணவில்லாத பட்சத்தில்., கண்களில் கிடைக்கும் சக விலங்குகள் மற்றும் உயிரினத்தை கொன்று சாப்பிட்டு வாழும்.. பறவைகளுக்கு உணவில்லை என்றால்., அதிலும் புதியதாக பிறந்துள்ள குஞ்சுகளுக்கு உணவில்லை என்றால் அவை என்ன செய்யும்.. பறவை தனது குழந்தைக்கு உணவளிக்க எங்காவது பறந்து சென்று இரையை கொத்தி., மென்மையாக அரைத்து தனது குழந்தையின் வாயில் ஊட்டும். அவ்வாறு ஊட்டும் சமயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் என்ன ஆகும்.. இது குறித்த வீடியோ காட்சிகளே வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது..
மனிதன் என்ற சுயநலவாதி வாழ்வதற்க்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக காத்துக்கொண்டு இருக்கிறதோ.!! #Savebirds #Plastic #avoidplastic pic.twitter.com/wLxjxBTmtT
— Seithi Punal (@seithipunal) May 28, 2019
ஒரு பிஞ்சு பறவை குஞ்சின் வயிற்றில் அத்தனை பிளாஸ்டிக் துகள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்கிறது. மருத்துவர்கள் அந்த குட்டி பறவை குஞ்சின் வாயில் நீரை ஊசியின் உதவியுடன் நீரை நிரப்பி பின்னர் அந்த குஞ்சு வாந்தி எடுக்கும் போது., வெறும் பிளாஸ்டிக் துகள்கள் வெளிவருகிறது. இந்த வீடியோ பதிவு குறித்த முழு தகவல் வெளியாகாத நிலையில்., நாம் பெரிய அளவிலான இழப்பை இந்த பிளாஸ்டிக் எனப்படும் கொடிய அரக்கனால் சந்திக்கப்போகிறோம் என்பதே உண்மை….