பங்களாதேஷில் வசித்து வருபவர் நஸ்ரத் ஜஹான். 16 வயது நிறைந்த பள்ளி மாணவியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு அடித்து புகார் அளித்திருந்தார் .மேலும் மாணவி புகார் அளித்ததை வீடியோவாக பதிவு செய்த போலீசார் அதனை தொடந்து பள்ளி தலைமை ஆசிரியரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் தங்களது தலைமையாசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும், நஸ்ரத் பொய் கூறுகிறார் எனவும் கூறி அவரை விடுதலை செய்ய மாணவர்கள் சிலர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த நஸ்ரத் தேர்விற்காக கடந்த மாதம் தனது சகோதரர் துணையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி வளாகத்திலேயே அவருடைய சகோதரர் நிறுத்தப்பட்ட நிலையில், நஸ்ரத் மட்டும் தனியாக உள்ளே சென்றுள்ளார்.
அங்கு வந்த மாணவி ஒருவர் தனது தோழியை சிலர் தாக்குகிறார்கள் என பொய் கூறி மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு புர்கா அணிந்திருந்த மர்ம நபர்கள் சிலர் தலைமையாசிரியர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டி உள்ளனர்.ஆனால் அதற்கு நஸ்ரத் தெரிவித்தநிலையில் அவர்கள் நஸ்ரத்தின் கைகளை கட்ட, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் 80 சதவீத காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நஸ்ரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனது சகோதரனின் செல்போனில் தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நஸ்ரத் கடந்த மாதம் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பாரதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த கொடூர கொலைக்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது.