கணவனை அடித்தே கொலை செய்த மனைவி.! வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்.!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜீ.உசிலம்பட்டியை சார்ந்தவர் அய்யனார் (வயது 46). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 36 வயதுடைய வீரமணி என்ற மனைவியும்., இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அங்குள்ள ராஜதானி கொட்டபட்டியில் வசித்து வந்த நிலையில்., கடந்த 12 ஆம் தேதியன்று மார்ச் மாதத்தில் தலையில் பலத்த காயங்களுடன் அய்யனார் படுகாயம் அடைந்த நிலையில் இறந்துள்ளார்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறுதி சடங்குகள் செய்து கொண்ட நிலையில்., இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே சம்பவ இடத்திற்கு விரைந்து அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த நிலையில்., தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும்., இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மனைவி வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., மனைவிடம் மேற்கொண்ட விசாரணையில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., கணவரை அடித்துக் கொலை செய்துள்ளது ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தாவது., எனது கணவர் மது பழக்கத்திற்கு ஆளான நிலையில்., தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார்.

ஒரு சமயத்திற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை., அதனால் ஆத்திரம் அடைந்த அவரை அடித்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த தகவலானது வெளியானதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.