கடலூரில் வசித்து வருபவர்கள் சிற்றரசு- ராஜலட்சுமி தம்பதியினர். அவர்களது மகன் அருள்வேல். 36 வயது நிறைந்த இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் அவர்களுக்கு 3 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளார்.
அருள்வேல் ஆன்லைனில் சூதாட்டவிளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் அவர் பல லட்சம் ரூபாய் கடனாளியாகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அனைவரும் கடனை திருப்பி கேட்டு ஓயாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் வசித்து வேலை பார்த்து வந்த அருள்வேல் அண்மையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் திவ்யா தனது பிரணவுடன் சென்னையிலேயே தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அருள்வேல் பண்ருட்டியில் தனது பெற்றோர்களுடன் இருப்பதை தெரிந்துக்கொண்ட கடன் கொடுத்தவர்கள் அங்கேயே சென்று கடன்பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் வேதனையில் இருந்த அருள்வேல் தனக்கு வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ள போகிறேன் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சிற்றரசு வீட்டில் இல்லாதபோது, அருள்வேலுடன் மகன் மேல் உயிரையே வைத்திருந்த அவரது தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே திரும்பி வந்த சிற்றரசு, மனைவியும் மகனும் விஷமருந்தி உயிரிழந்தநிலையில் சடலமாக கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.