தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மிகப்பெரிய உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாத்துறையில் சற்று வித்தியாசமானவர் தல அஜித்.
தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர்மூச்சாக இருந்து வருபவர் நடிகர் அஜித். தல அஜித் நடித்த படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு, பேனர் , கட் அவுட் என அதிரவைப்பார்கள் அஜித் ரசிகர்கள். தல எப்போதுமே தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர்.
இந்தநிலையில் அஜித் தற்போது “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ்போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இபபடத்தில் தல அஜித் வக்கீலாக நடிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் அதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.