கோயம்புத்தூர் ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடத்தில் ஆறு தலங்கள் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் துணிவகைகள், பாத்திர வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த தளத்தில் பொதுமக்கள் நெருக்கடி இன்றி பொருட்களை வாங்குவதற்கும், அமர்வதற்கும் இடைவெளியில்லாமல் பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் ஆறு தளத்திலும் அவசரகால வழிகள் எதுவும் இல்லை என்றும் தரைதளத்தில் வாகன நிறுத்தும் இடத்தை குடோனாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதி பெறப்பட்டதற்கு முரன்பாக கட்டிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடையை மூடிவிட்டு உள்ளூர் திட்ட குழு அதிகாரிகள் அறிவுரையின் பேரில் கட்டிடத்தை மாற்றி அமைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கடை திறக்கப்பட்டதையடுத்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். வாடிக்கையாளர்கள் வருவதற்கு முன்பே கடைக்கு சீல் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.