லஞ்சமாக இரண்டு நடிகைகளை அவர் கேட்டார்… அதிரவைத்த சுப்ரமணியன் சுவாமியின் டுவீட்

ஊழல் வழக்கு ஒன்றிற்காக லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால் என்ன தண்டனை என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க பிரமுகரான சுப்ரமணியன் சுவாமி இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு திட்டத்துக்கு அனுமதி கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கிறதா?

தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியின் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவர் யார் குறித்து அவ்வாறு பேசுகிறார் என சமூகவலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.