உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்து இறந்து போகும் துயரமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு, தற்போது பருவகாலம் என்பதால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மலையேற்ற வீரர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் இறக்கும் வீரர்களின் எணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த அஞ்சலி சரத் குல்கர்னி (54) என்பவர் தன்னுடைய கணவருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றுள்ளார்.
25 வருட அனுபவம் இருந்தாலும் அதிக பனிமூட்டத்தின் காரணமாக அஞ்சலி ஏறுவதற்கு தாமதமாகியுள்ளது. அதனால் அவருடைய கணவர் வேகமாக உச்சிக்கு சென்றுவிட்டார்.
மற்றொரு குழுவுடன் மெதுவாக ஏறிக்கொண்டிருந்த அஞ்சலி, பாதி வழியிலே திடீரென மயக்கமடைந்து தரையில் விழுந்துள்ளார்.
அருகாமையில் இருந்த மற்ற இரண்டு பேர் அவருடைய கையை பிடித்து மேலே இழுக்க முயற்சித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் கண்முன்னே அஞ்சலி உயிரிழந்துள்ளார்.