மீண்டும் சோகத்தில் நடிகை கஜோல் குடும்பம்

இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடி கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அஜய் தேவ்கனின் அப்பா காலமானார். அவருக்கு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று கஜோலின் அம்மா தனுஜா நெஞ்சு வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் காஜலின் குடும்பம் மீண்டும் சோகத்தில் உள்ளது.

75 வயதாகும் தனுஜாவும் பிரபல நடிகை என்பது கூடுதல் தகவல். Memdidi, Chand Aur Suraj, Baharen Phir Bhi Aayengi, Jewel Thief, Nai Roshni போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்.