துபாயில் வேலைபார்க்கும் தமிழனுக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்…

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் பார்வை எல்லாம் தன் பக்கம் விழ வைத்துள்ளார்.

இப்போது எல்லாம் சமூகவலைத்தளங்களில் ஒரு சின்ன பதிவேற்றம் செய்தால் கூட அதை மிகவும் கவனமாக பதிவேற்ற வேண்டி உள்ளது. அந்த பதிவேற்றம் நம்மை உச்சிக்கும் கொண்டு செல்லலாம், ஒரு சில நேரங்களில் நம் காலையும் வாரிவிடலாம், அந்தளவிற்கு இப்போது சமூகவலைத்தளங்கள் ஒரு முக்கிய பங்காக ஆற்றி வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் டுவிட்டர் பக்கத்தில், நேசமணிக்கு பிரார்த்தனை செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ஒன்று வைரலானது, காரணமே இல்லாமல் இந்த ஹேஷ்டேக் வைரலாகி வரும் நிலையில், அது எப்படி டிரண்டானது, இதற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரித்த நிலையில், அவர் தமிழகத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் பகுதியில் இருக்கும் ஒரு குக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கமான சிவில் இன்ஜினியரிங் லெர்னர் பக்கத்தில், சுத்தியல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, உங்கள் ஊரில் இதைப் எப்படி குறிப்பிடுவார்கள் என்று கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒருவர் இதற்கு பெயர் எங்கள் ஊரில் சுத்தியல் என்று கூறுவர், இதை வைத்து தட்டினால், டங்..டங் என்ற சத்தம் வரும், என்று குறிப்பிட்டதுடன், இது நேசமணி மண்டையின் மீது பட்டதால், அவருக்கு காயம் ஏற்பட்டது என்று குறிப்பிடிருந்தார்.

உடனே இதைக் கண்ட இணையவாசிகள் பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டரான நேசமணியின் புகைப்படத்தை பதிவிடு மீம்ஸ்களை பறக்கவிட்டனர்.

இது குறித்து அவர் பிரபல தமிழ் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் இந்தளவிற்கு டிரண்டாகும் என்று நினைக்கவில்லை, நான் துபாயில் வேலை பார்த்து வருகிறேன், சாதரணமாக போட்ட டுவிட் இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் என்றால் நம்பமுடியவில்லை.

இது எல்லாம் உண்மையில் ஒரு வகையான அதிஷ்டம் என்றே கூற வேண்டும். இதற்கு காரணமான நடிகர் வடிவேலுவுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.