வயதாக வயதாக நமது உடல் பலவீனம் அடைந்து பல நோய்களை ஏற்படுத்தி நம்மை எந்த வேலைகளையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.
அதில் ஒன்று தான் கால்கள் பலவீனமடைதல். இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருத்தல், நரம்பு பாதிப்பு, அதீத வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஆர்த்ரிட்டீஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது
கால்கள் பலவீனம் அடைந்தால் இந்த பலவீனம் ஒரே ஒரு கால்களை அல்லது இரண்டு கால்களையுமே பாதிப்படையச் செய்கின்றது.
இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- சூரிய ஒளியில் இருப்பது எலும்புகளுக்கு தேவையான விட்டமின் டி சத்தை கொடுக்கிறது. எனவே அதிகாலையில் 10-15 நிமிடங்கள் இருப்பது நல்லது.
- விட்டமின் டி அதிகமான உணவுகளான சால்மன், சேர்டைன்ஸ், மாக்குரெல், ஃபோர்பிட்டேடு பால், ஆரஞ்சு ஜூஸ், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
- டேபிள் ஸ்பூன் கருப்பட்டி பாகுவை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து குடியுங்கள். ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டும் முறை குடித்து வாருங்கள்.
- 2 டீ ஸ்பூன் கருப்பட்டி பாகுவை ஆப்பிள் சிடார் வினிகருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வாருங்கள்.
- 1-2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இந்த டானிக்கை 1 அல்லது 2 வேளை என குடித்து வாருங்கள்.
- தினமும் 1 கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பாலை குடித்து வந்தால் கால்கள் வலிமையாகும். ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பாலில் அத்திப்பழம், டேட்ஸ், பாதாம் பருப்பு போன்றவை சேர்த்து குடியுங்கள். எலும்புகள் வலிமையாகும்.
- தினமும் 2-3 கப் குதிரை வாலி டீ போட்டு குடித்து வரலாம். 2 வாரத்திற்கு மேல் குடிக்க வேண்டாம். 1 டீ ஸ்பூன் குதிரை வாலியை 1 கப் கொதிக்கின்ற நீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பேரில் குதிரை வாலி மாத்திரைகளைக் கூட சாப்பிட்டு வரலாம்.
- போதிய புரோட்டீன் இல்லை என்றால் கால்கள் பலவீனமாகும். முட்டைகள், யோகார்ட், சோயா உணவுகள், நட்ஸ் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பொட்டாசியம் உள்ள உணவுகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், பிளம்ஸ், உலர்ந்த திராட்சை, தக்காளி ஜூஸ், பூர்ண ஜூஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது.
- மக்னீசியம் தசைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. பூசணிக்காய் விதைகள், சூரிய காந்தி விதைகள், பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள் போன்ற மக்னீசியம் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- விட்டமின் பி உள்ள உணவுகளான தானியங்கள், முட்டை, பயிறு வகைகள், வாழைப் பழம், கோதுமை, பீன்ஸ், மீன்கள், ஓட்ஸ், சீஸ் மற்றும் யோகார்ட் சேர்த்து கொள்ளுங்கள்.