ஆங்கிலேயரின் வஞ்சனையில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட நிலையில், வேலுநாச்சியார் தன் நாட்டை வீரம் கொண்டு வென்றது குறித்து பார்க்கலாம்.
வேலு நாச்சியார் பல இடங்களில் பெண்களின் வீரத்திற்கு முன் உதாரணமாக கூறப்படும் ஒரு வீரமங்கை.
இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி மற்றும் தாய் முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின் ஒரே மகளாய் பிறந்தவர் தான் வேலு நாச்சியார். இவருக்கும் சிவகங்கை இளய மன்னர்,முத்துவடுகநாதர் தேவர்கும் திருமணம் நடைபெற்றது. இராஜ குடும்பத்தில் தொடரும் வாழ்க்கை ஆன்மீகம், சிவகங்கை மக்கள் என்று மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர்ந்தார் வேலுநாச்சியார்.
இந்நிலையில் முத்துவடுகநாதர் களரியில் சிறந்து விழங்கினாலும், சிவபக்தனான அவர் கோவிலுக்கு செல்கையில் தனது ஆயுதத்தை எடுத்து செல்வதில்லை. இதனை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்து சிவகங்கையை கைபற்ற நினைத்தனர்.
அவர் திட்டப்படி கொலை செய்து சிவகங்கையை கைபற்றினர்.
இது வேலுநாச்சியாருக்கு பெரும் துயரத்தை தந்தது. மேலும் வாழக்கையை மாற்றிப்போடும் புள்ளியாகவும் மாறியது.
இதன்பின் வேலுநாச்சியார் மருது சகோதரர்களின் அறிவுரை ஏற்று எட்டு வருடம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இராணி தலைமறைவாக இருந்த பொழுது பல கோட்டைகளில் இருந்தார். தேவகோட்டை அருகில் உள்ள சக்கரபதி கோட்டை, அரண்மனை சிறுவயல் கோட்டை, பாண்டியன் கோட்டை, அரியக்குறிச்சி கோட்டை, படமாத்தூர் கோட்டை, மானாமதுரை கோட்டை, என பல கோட்டைகளை போர் பயிற்சி செய்யும் இடமாக இருந்துள்ளது.
இந்த கோட்டைகள் எல்லாம் காடுகளுக்கு நடுவில் இருந்ததால், சிரமம் இல்லாமலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முட்புதர்களே, அரணாக இருந்ததால் அந்நியர்கள் அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைந்தித்த முடியாது. அந்த அளவிற்கு இடங்களை தேர்வு செய்து கோட்டைகள் கட்டப்பட்டது.
விருப்பாட்சியில் இருக்கும் பொழுது ஐதர் அலிக்கு கடிதம் எழுதுகிறார் இராணி, அதற்கு ஐதர் அலி, இங்கு வந்த நீங்கள் போர் பயிற்சி எடுக்கலாமே என்று கேட்டதற்கு, இல்லை இருக்கட்டும், நான் விருப்பாட்சி மற்றும் அரண்மனை வயல், படமாத்தூர் போன்ற கோட்டைகளில் மாறி மாறி பயிற்சி எடுத்துக்கொள்கிறேன் என்று பதில் அனுப்பி உள்ளார்.
மேலும், இராணி கேட்ட பன்னிரண்டு பீரங்கிகள், ஐநூறு தூப்பாக்கிகள், குதிரைகள் வீரர்கள், என படையை திப்பு சுல்தான் மூலமாக அனுப்பி வைத்தார்.
பின் 1780-ல் போர் அறிவித்து வியூகம் அமைத்தார் இராணி வேலு நாச்சியார்.
பின் ஐதர் அலியுடன் சேர்ந்து வியூகம் அமைக்கிறார் இராணிவேலு நாச்சியார். காரணம் ஜெனரல் பெய்லி, மற்றும் கர்னெல் மான்ஜோ, இரண்டு கொடிய விலங்குகளை ஒன்று சேர விட்டால் சேதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணினார் ஐதர் அலி, அதை வரவேற்றார் வேலு நாச்சியார்.
இவ்வாறு சிவகங்கையை கைபற்றினார் இராணி…
இராணி வேலு நாச்சியார் ஜெயிக்க அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகம், தான் காரணம். அதிலும், தற்கொலை படை, கொரில்லா படை இதையெல்லாம் வைத்து தான் இவர் இத்தனை சுலபமாக இந்த வெற்றியை பெற முடிந்தது என்று கூறுகிறது. வேலுநாச்சியாருக்கு முற்றிலும் உறுதுணையாக இருந்தவர்கள் மருது சகோதரர்கள் ஆவர்.
1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.