நமது இல்லத்தில் கர்ப்பிணி பெண் இருக்கும் நேரத்தில் பிரசவ வலியானது ஏற்படும் பட்சத்தில்., உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறிது காலதாமதம் ஏற்பட்டால் அதிகளவு பதட்டம் அடைய வேண்டாம். உங்களின் பதற்றம் கர்ப்பிணி பெண்ணையும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
பிரசவ வலியானது ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பின்னர் தான் குழந்தையானது பிறக்கும். இந்த நேரத்தில்., தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு., மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகிய பின்னர் மருத்துவர் தேவையான சிகிச்சையை வழங்குவார்.
இந்த சமயத்தில்., பிரசவத்திற்கு முன்னதாக உணவு ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாமா? என்ற சந்தேகமானது அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகமாகும். இந்த நேரத்தில் வயிற்றில் உணவுகள் இருப்பின் அது பிரசவத்திற்கு சில சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் கருப்பையின் வயானது திறக்கப்படும் சமயத்தில்., வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வானது ஏற்ப்படும். இதனால் வயிறில் உள்ள உணவுகள் அனைத்தும் வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு களைப்பை ஏற்படுத்தும் என்பதால்., இந்த சமயத்தில் பிரசவத்திற்க்காக பெண்கள் மூச்சினை பிடித்து முக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு சக்தியில்லாமல் போக்கும் பட்சத்தில் அது பிரசவத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பும் பட்சத்தில்., சாப்பிடாமல் இருப்பது நல்லது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக சாப்பிட்டால் மயக்கம் ஏற்பட நேரம் எடுத்துக்கொள்ளும்.
இந்த நேரத்தில் கட்டாயம் உணவு தேவைப்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று., உடலுக்கு சத்துக்களை வணக்கம் பால் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் சாப்பிடுவது நல்லது. இதன் காரணமாக நமது வயிறும் நிரம்பாது., பிரசவத்திற்கு எந்த விதமான சிக்கலும் இருக்காது. மருத்துவமனைக்கு சென்றவுடன் கர்ப்பிணி பெண்ணை சோதித்து கருப்பையின் உட்புறத்தை சோதனை செய்து., வராண்டாவில் நடக்க சொல்லி பின்னர் பிரவத்திற்க்காக தயாராகுவர்.