உலக கோப்பை போட்டி கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெல்ல போகிறார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக கோப்பை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான கவாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது என கூறினார்.
உலகிற்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ள இங்கிலாந்து அணி. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்துள்ளது.