இந்திய அணிக்கு வந்த அசூர பலம்..

உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக களமிறங்குகிறது.

கோப்பை கைப்பற்றும் அணிகளில் ஒன்றான இந்திய அணி அசுர பலத்துடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றாலும், வேகப்பந்துவீச்சில் சற்று திணறும்.

குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தின் பிட்ச் மையத்தை கண்காணிக்காமல் தேவையில்லாத ஷாட்களை அடித்து விரைவாக ஆட்டமிழப்பார்கள்.இதனை மாற்றிக்கொண்டால் தான் அரையிறுதிக்கு எளிதாக செல்லலாம்.

பந்துவீச்சு யூனிட் பலமாக இருப்பதால் பிரச்சனை இல்லை. புதிய வரலாறு படைக்க இந்திய அணி மீது தனி கவனம் செலுத்தி வரும் பாகிஸ்தானை கவனமாக கையலாளல் நல்லது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளை சமாளித்தால் கோப்பையை எளிதாக வெல்லலாம்.

மொத்தத்தில் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இந்திய அணிக்கு பிரகாசமாக தான் உள்ளது.