சென்னை அடுத்த, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,
இதே எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அதற்கு முதல் நாள் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்தது பல்கலை கழக வட்டாரத்தில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
பொன்னேரியை சேர்ந்த மாணவி 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஜார்க்கன்டை சேர்ந்த மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து பெரிதாக வெளியே தெரியாமல் பார்த்து கொண்டார்கள் என மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.
இந்த பல்கலைக்கழகம் பெரம்பலூர் மக்களவை தொகுதியில், திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்துவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலோ, வேறு எங்கோ எந்த மாநில மாணவர் தற்கொலை செய்துகொண்டாலும் விசாரிக்க வேண்டும் என அறிக்கை வெளியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலின், தற்போது திமுக எம்பி கல்லூரியில் நடைபெற்றுள்ள தற்கொலைகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது தான் அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த தற்கொலைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்துவாரா? அல்லது தங்கள் கட்சி எம்பியின் கல்லூரி என்பதால் தொடர்ந்து மௌனம் காப்பாரா? என்பது அவருக்கு தான் வெளிச்சம்.
சொல்லிவைத்தார் போல இந்த துயரமான சம்பவம் தமிழகத்தில் ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக இணையதளங்களில் குற்றம்ச்சாட்டி வருகிறார்கள்.