ஆண்மையில்லையா என இளையராஜா கூறியதற்கு 96 இசையமைப்பாளர் அளித்துள்ள பதில்!

96 படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, ‘அந்த இசையமைப்பாளரின் ஆண்மையில்லாத்தனத்தை இது காட்டுகிறது’ என விமர்சித்திருந்தார்.

இது பெரிய சர்ச்சையான நிலையில் தற்போது 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நான் எப்போதும் இளையராஜா ரசிகன் தான் என கூறி தளபதி படத்தின் பாடல் ஒன்றை வயலினில் அவர் வசிக்கிறார் கோவிந்த் வசந்தா.

அவரின் மெச்சூரிட்டியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.