அழகிய மணமகளின் முகத்தில் ஆசிட் வீச்சு: மாப்பிள்ளை வெறிச்செயல்…

நிச்சயம் செய்த மணப்பெண் திருமணதிற்கு மறுப்பு தெரிவித்ததால், முகத்தில் ஆசிட் வீசி மணமகன் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

வியட்நாமை சேர்ந்த நாக்யென் துருங் நாம் ஹை (24) என்கிற தீயணைப்பு துறை வீரர், தி லேன் வி (24) என்கிற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

தன் மீது அதிக பாசத்துடன் நடந்துகொண்டதால், துருங் நாமின் காதலுக்கு அந்த இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டிசம்பர் மாதம் இருவீட்டாரும் இணைந்து நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர்.

திருமணநாள் நெருங்கி வந்த பொழுது துருங் நாமின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். கோபத்துடன் பேசுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், அவரிடம் இருந்து பிரிந்து செல்ல தி லேன் வி முடிவெடுத்துள்ளார்.

இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததும், பேசி முடிவெடுக்கலாம் என இருவீட்டாரும் ஒரு இடத்தில் கூடியுள்ளனர். அப்போது துருங் நாம், சமையலறையில் தான் மறைத்துவைத்திருந்த ஆசிட் திரவத்தை தி லேன் வி மீது ஊற்றியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் மகள் சத்தமிடுவதை கேட்டு அவருடை தாய் காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூரமான சம்பவத்தில் அந்த இளம்பெண்ணின் முகம், கை, கால் பகுதிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார், துருங் நாமை விசாரணைக்கு உட்படுத்தினர். இதற்கிடையில் அவரை பதிவியிலிருந்து நீக்கி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பாதிக்கப்பட்ட தி லேன் வி கிட்டத்தட்ட 10 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், குற்றவாளி மீதான வழக்கு விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை என அவருடைய தாய் வேதனை தெரிவித்துள்ளார்.