இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியை தொலைக்காட்சியில் பார்த்து கைதட்டி இரசித்தார் அவரின் தாயார் ஹீரா பென்.
இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் மோடியின் தாயார் ஹீரா பென் பார்த்து கைதட்டி இரசித்தார்.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் பா.ஜ.கவினர் இனிப்புக்களை வழங்கிக் கொண்டாடினர்.